கல்வாரி அன்பே கல்வாரி
kalvaari anbae kalvaari
கல்வாரி அன்பே கல்வாரி அன்பே கல்லான என்மனம் மாற்றிய அன்பே விலையேறப் பெற்ற நல் அன்பே என் நிலைமாற புவிமீது பலியான அன்பே
1. சிலுவையை சுமந்துகொண்டு - நீர் மலைமீது நடந்ததும் எனக்காகவோ சிறுமையை ஏற்றுக் கொண்டு - நீர் பொறுமையாய் இருந்ததும் எனக்காகவோ பாவங்கள் புரிந்தவன் நானிருக்க பரிசுத்தர் உமக்கேன் பாடுகளோ பாதகன் நான் சுகமாய் இருக்க தேவனே உமக்கேன் அவமானமோ எனை மீட்க பாரினில் வந்த அன்பே எனக்காக ஜீவனை தந்த அன்பே (கல்வாரி)
2. வாரடிகள் உமக்கேன்? - மா வேதனை சோதனை தான் உமக்கேன்? ஆணிகள் அறைந்ததும் ஏன்? - உன் அழகிய முகத்தினில் குருதியும் ஏன்? ஈட்டியால் சேவகர் குத்தியதேன்? கசந்ததோர் காடியும் கொடுத்ததும் ஏன்? அறியாமல் செய்கின்ற இவர்களையும் அப்பா நீர் மன்னிக்க வேண்டுமென்றீர் எனை மீட்க பாரினில் வந்த அன்பே எனக்காக ஜீவனை தந்த அன்பே (கல்வாரி)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal