கலப்பையின் மேல்
kalappaiyin mel
கலப்பையின் மேல் கைகளை - நாம் வைத்து விட்டோம் கலங்கி இனி பின் திரும்பி பார்க்க மாட்டோம் உலகம் இனிவேண்டாம் - நம் ஏசு போதும் (2)
1. வல்லவரை அறிந்துகொண்டோம் நல்ல பங்கை தெரிந்து கொண்டோம் உள்ளமதில் நிறைவாய் - அவரை ஏற்றுக் கொண்டோம் இன்னல்களை அவர்மேல் வைத்தோம் தொல்லைகளை தொலைத்தே விட்டோம் வள்ளலவர் பிள்ளையாக - மாறிவிட்டோம் உலகத்தில் உண்மை இல்லை அதிலெமக்கு பங்கும் இல்லை ஏசுவைப்போல் நேசரில்லை - அவர்போதுமே அல்லேலூயா அல்லேலூயா (2)
2. பரிசுத்த தெய்வம் அவரே பரலோக ராஜன் அவரே துன்பஙக்ள் தீர்க்கும் - நல்ல துணையாளரே அணையாத தீபம் அவரே ஆதரையில் ஒளியும் நீரே நீதியின் சூரியன் அவரே - நிலையானவர் இருளான பாவம் வேண்டாம் அழிகின்ற லோகம் வேண்டாம் அழியாத தேவன் ஏசு - அவர் போதுமே (அல்லேலூயா )
3. அழகுநிறை தேவன் அவரே அன்பு மணவாளனவரே பதினாயிரம் பேரில் - சிறந்தவரே உண்மையின் ரூபம் அவரே வெண்மை சிவப்பானவரே நன்மைகளின் தேவன் அவரே - விண்நாயகன் அவர்தானே ஜீவன் என்போம் அவரை விட்டு எங்கு செல்வோம் அவர்நாமம் எங்கும் சொல்வோம் - அவர் போதும் (அல்லேலூயா )
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal