கடன் கொடுப்போம்
kadan koduppom
கடன் கொடுப்போம் - கர்த்தருக்கே கடன் கொடுப்போம் ஏழைகளுக்கு இரங்கிய - நிதம் இயேசுவுக்கே கடன் கொடுப்போம்
1. போதுமென்ற மனமிருந்தால் மிகுந்த லாபம் பெற்றிடலாம் தேவ பக்தி உடனிருந்தார் ஆசீர்வாதம் அடைந்திடலாம் பேராசை பெரு நஷ்டம் உணர்ந்தவரில்லை கஷ்டம் ஐஸ்வர்ய மயக்கம் நம்மை மதிகேட்டில் தள்ளியழிக்கும் - கடன்
2. இயேசு எந்தன் ஜீவன் என்றால் சாவு கூட லாபமன்றோ ஞானம் தரும் ஆதாயம் பசும்பொன்னை விட உத்தம மன்றோ பொல்லாத பொருளாசை சேதமாக்கும் மாம்ச இச்சை வேதனைகள் உருவகுத்தும் தீமைக்கெல்லாம் வேராகும் - கடன்
3. அகிலத்தை ஆண்டு அதையும் ஆதாயமாக்கிடலாம் ஜீவன் நஷ்டமடைந்தால் மனிதனுக்கு அதில் லாபமென்ன ஐஸ்வர்ய சம்பத்து எல்லாம் எவன் பெற அவர் சித்தம் அவன் பங்கில் மகிழ்ந்திடவே அதிகாரம் அவர் தருவார் - கடன்
4. கடன் தொல்லை தீர்ப்பது தான் கர்த்தரின் வேலையே பாவ கடன் தீர்த்த பின்னே உலகம் நமக்கு பெருந்தொல்லையோ - கடன்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam