காலங்களையும் நேரங்களையும்
kaalangalaiyum nerangalaiyum
காலங்களையும் நேரங்களையும் வீணாக நீ கழித்திடாதே ஜீவன் தந்த தேவனுக்கு நேரம் இல்லை என்று சொல்லி விடாதே – 2
மனம் திரும்பு(வோம்) இன்றே திரும்பு(வோம்) (4)
1. செல் போன் பார்க்க நேரமிருக்கு செல்பி எடுக்க நேரமிருக்கு – 2 சிலுவை சுமந்து மீட்டவரை தேடிட உனக்கு சிந்தை இல்லையோ – 2 (…மனம்)
2. ஊக்கம் நிறைந்த தூக்கம் உண்டு உண்ட மயக்கம் என்றும் (டெய்லி) உண்டு – 2 சண்டே மட்டும் இயேசு போதுமோ மண்டே ஆனா உலகம் வேண்டுமோ – 2 (…மனம்)
3. சொந்த வீடு கட்ட பணம் இருக்கு இன்னும் சொத்து சேர்க்க ஆசை இருக்கு – 2 ஆஸ்திகளாலே கர்த்தருக்கு ஊழியம் செய்திட மனம் இல்லையோ – 2 (…மனம்)
4. மேக் அப் போடும் மை டியர் சிஸ்டர் அழகாய் டிரஸ் பண்ணும் மை டியர் பிரதர் – 2 உள்ளான வாழ்வின் அலங்கோலத்தை கண்டும் காணாமல் இருப்பது ஏன் – 2 (…மனம்)
5. கிரிக்கெட் பார்க்கும் கிறிஸ்தவனே கிருபையின் காலத்தை வீணாக்காதே – 2 சண்டை போடும் கிறிஸ்தவனே சத்திய வேதம் மறந்திடாதே – 2 (…மனம்)
6. பட்டம் பதவி ஆசை பெருகுது ஹோலி லைப் காலியாகுது – 2 நூதன போதனை கவர்ந்திழுக்குது ஆதி அன்பு பறிபோகுது – 2 (…மனம்)
7. புனித பயணம் உன்னை புனிதமாக்குமோ சும்மா சுற்றுலா நியாயமாகுமோ – அண்ணேன் – 2 சினிமா சீரியல் தகுதியாகுமோ சிற்றின்பம் உன்னை வாழவைக்குமோ – அக்கா – 2 (…மனம்)
8. நற்செய்தி அறிவிக்கும் காலமிது ஆத்தும அறுவடை நேரமிது – 2 இயேசு வருகின்றார் ஆயத்தப்படு நித்திய வாழ்வை எதிர்நோக்கிடு – சபையே – 2 (…மனம்)
9. எழுப்புதல் காலம் வந்துவிட்டது தேசங்கள் இயேசுவை அறியப்போகுது – 2 இந்த காலத்தில் மௌனம் கொள்ளாதே எழுந்து எரிந்து ஒளி வீசிடு – 2 (…மனம்)
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal