காலைதோறும் கர்த்தனே
kaalaidhorum karthanae
காலைதோறும் கர்த்தனே புது கிருபையை தினம் பொழிகின்றீரே
நம் தேவன் நல்லவரே மா தேவன் வல்லவரே உம் சமூகம் எனக் கானந்தமே
1. ஆழியின் அலைகள் ஓயாது போல் அன்பின் அலைகள் எழும்புமே மலைகள் விலகும் பர்வதம் அகலும் மாறா உம் கிருபை நீங்கிடாதே
2. ஆதி அதிசயம் அற்புதங்கள் வல்லமை நானும் கண்டிடவே மகிமையின் சாயல் அணிந்து நானும் மனதில் மறுரூபமாகிடுவேன் - காலை
3. சபையின் நடுவில் வல்லமை விளங்க சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில் சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்
4. கனி மரமாய் நான் செழித்திடவே கர்த்தரே உமது பெலன் தாரும் காலா காலத்தில் பலனைக் கொடுக்க கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்
5. ஜாதிகள் நடுவில் உம் ஜனமே கலங்கரை விளக்காய் திகழவே எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய அக்கினி ஆவி ஊற்றிடுவீர்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal