ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய்
jeevanulla naatkalellaam yesuvukkaay
ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வோம் இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்
இயேசுவும் தனக்காய் வாழாமல் அவர் நமக்காய்த் தானே வாழ்ந்தாரே உயிரையும் கூட நமக்குத் தந்தாரே இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்
ஊழியம் செய்வது பாக்கியமே அதின் பலனோ இன்று நாம் அறியோமே கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே அன்று இதன் பலன் கொண்டு வருவாரே கண்டு மகிழ்ந்திடுவோம் – துள்ளிடுவோம்
யாரோ செய்யட்டும் எனக்கென்ன நான் நலமாய் இருந்தால் அதுபோதும் என்றே சுமாய் வாழ்வதினாலே பின்னால் நீயும் வருந்திடுவாயே என்றே உணர்ந்தாயோ, இன்றே வா
உலகத்தையே சொந்தமாக்கினாலும் அதினாலே லாபம் ஒன்றுமில்லையே இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ அதுவே உனக்கு உதவிடும் என்று ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia