இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே
iratham jeyam iratham jeyamae
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே இயேசுவின் இரத்தம் ஜெயமே இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே சிலுவையின் இரத்தம் ஜெயமே பாவமில்லா இரத்தமே
பாவம் போக்கும் இரத்தமே நம் ராஜாவின் இரத்தம் ஜெயமே
ஆதி பிதா ஆதாம் செய்த பகை நீக்கி பரம பிதாவோடு நம்மை சேர்த்திட்டதே மகிமையைக் காண திரையை கிழித்து மகா பரிசுத்த ஸ்தலம் சேர்த்திட்டதே இயேசுவின் இரத்தம் சமாதானமே - இது பகைமை வேரை அறுத்திட்டதே
சொட்டு சொட்டாய் இரத்தம் சிந்தினதினாலே - என் கெட்டுப்போன வாழ்வு மாறியதே பாவம் போக்க ஒரு பரிசுத்த இரத்தம் வானம் பூமியெங்கும் வேறொன்றுமில்லையே இயேசுவின் இரத்தம் இல்லையேல் பாவ மன்னிப்பு நமக்கில்லையே
பொல்லாத சாத்தான் தலை நசுங்கிட என் இயேசுவின் ஒரு சொட்டு இரத்தம் போதுமே தோற்றுப்போன சாத்தான் எந்த வல்லமையும் நம் இயேசுவின் இரத்தம் முறியடித்திடுமே இயேசுவின் இரத்தம் வல்லமையே - இது எதுவும் செய்திடுமே
வியாதிகள் எல்லாம் பெலவீனம் எல்லாம் நம் இயேசுவின் இரத்தம் சுகமாக்கிடுதே மந்திரங்க ளெல்லாம் செய்வினைகள் எல்லாம் நம் இயேசுவின் இரத்தம் சுட்டு எரித்திடுதே இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயமே என்றும் தோல்வி இதற்கில்லையே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia