இராஜாதி இயேசு ராஜா
iraajaadhi yesu raajaa
இராஜாதி இயேசு ராஜா இணையில்லா இயேசு ராஜா இயேசுவோடு என்றென்றும் வாழ இதயமெல்லாம் தினம் ஏங்குதே தினம்தோறும் தேடி பாடிட என் மனம் அவரிடம் வந்திடுதே
பெலப்படுத்திடும் கிறிஸ்துவினாலே எதையும் செய்ய பெலனுண்டு - எனக்குண்டு ஜெயங்கொடுத்திடும் கிறிஸ்துவினாலே எதிலும் ஜெயம் எனக்குண்டு - எனக்குண்டு எனக்குள்ளே அவர் வாழ்வதினாலே எதற்கும் பயம் இனி இல்லையே எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே எல்லாமே பார்த்துக் கொள்வார் - அவர் (2)
போகும் இடமே எதுவானாலும் கூட அவர் வருவாரே - வருவாரே கால்கள் சறுக்கி விழுந்து விடாமல் தோளில் சுமந்திடுவாரே - சுமப்பாரே என்னைவிட்டு விலகுவதில்லை என்னையே கை விடுவதுமில்லை பலவீனம் நீங்கியே கலக்கங்கள் நீங்கியே பலங்கொண்டு திடமானேன் - நான் (2)
கர்த்தர் எனக்கு செய்திட்ட உதவி கணக்கிலே அடங்காது - அடங்காது என்ன ஈடாய் செய்திடுவேனோ எதுவும் இணையாகாது - ஆகாது இரட்சிப்பின் பாத்திரம் கையில் எந்தி இரட்கரை துதி பாடுவேன் சந்தோஷம் என்னிலே தானாக பொங்குதே அவரோடு மகிழ்ந்திருப்பேன் - நான் (2)
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia