இன்று முதல் உங்களை
indru mudhal ungalai
இன்று முதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன தேவனையே என்றும் துதிப்பேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (2) கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்
1. நேற்றுவரை பூமியிலே நானடைந்த பாடுகளை மாற்றியநல் தேவனையே போற்றி என்றும் பாடிடுவேன் தேற்றுகின்ற வாக்குகளை அளித்தெந்தன் நெஞ்சத்தையே ஆற்றுகின்ற அன்பரவர் திருப்பாதம் நாடிடுவேன்
2. ஆவியின்நல் வரங்களை பாவியெனக் கீந்தவரை ஆவியோடும் கருத்தோடும் அகமகிழ்ந்து பாடிடுவேன் ஆவலுடன் என்னையுமே அவர் மீட்டுக் கொண்டதினால் ஜீவனுள்ள நாள்வரையில் அவர் நாமம் போற்றிடுவேன்
3. உம் வருகை நாள் வரையில் உம்மோடு வாழ்ந்திடவே தம்மருளை நாடுகிறேன் தயவோடு ஈந்திடுவீர் இம்மையிலும் மறுமையிலும் உமதாசீர்வாதத்துடன் இன்னலின்றி மகிழ்வோடு இளைப்பாற செய்திடுவீர்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal