இந்த பூமியிலே
indha poomiyilae
இந்த பூமியிலே -2 இந்த பூமியிலே எனக்கென யாரும் இல்லை சொல்லிக் கொள்ள எவரும் இல்லை அன்பு காட்ட யாருமில்லை அணைத்திட ஒருவரில்லை இயேசைய்யா ....உம்மை விட்டால் எனக்கென யாருமில்லை ஆதரிக்க ஒருவரில்லை
1.வீட்டின் மேல் அமர்ந்திருகும் தனித்த குருவி போல வாடுகிறேன் வாடி தவிக்கிறேன் துணையாளரே .. தேற்றிட வாருமைய்யா ஆற்றிட வாருமைய்யா உம்மைவிட்டால் எனக்கென யாருமில்லை விடுவிக்க ஒருவரில்லை
2.அலைகடல் நடுவிலே அசைந்தாடும் படகிலே மருளுகிறேன் மடிந்து போகிறேன் நங்கூரமே .. அலைகடல் அதட்டுமையா அக்கரை சேருமையா உம்மைவிட்டால் எனக்கென யாருமில்லை அண்டிக்கொள்ள ஒருவரில்லை
3.உறவுகள் மறந்தாலும் உடைமைகள் இழந்தாலும் நம்புகிறேன் உம்மையே நம்பியுள்ளேன் என்னுயிரே .... என்னை நடத்துமையா இறுதிவரை நடத்துமையா உம்மைவிட்டால் எனக்கென யாருமில்லை வேறே ஒரு விருப்பமில்லை
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal