இந்த இரவை இன்பமாய்க் காண
indha iravai inbamaayk kaana
இந்த இரவை இன்பமாய்க் காணச் செய்த தேவனை நாம் ஸ்தோத்திரிப்போம்
சென்ற பகல் முழுவதிலும் நம்மை -2 க்ஷேமமுடன் பாதுகாத்த தேவனை -2
1.இந்த இரவிலும் இயேசுவே உம்மை இன்பமாய்ப் பாடக் கிருபை செய்திரே இரவிலும் ஆத்துமா உம்மை வாஞ்சித்து - 2 இன்பமாய் இருக்க நீர் கிருபை செய்வீரே - 2
2. இந்த இரவிலும் இயேசுவே உம்மைக் கெஞ்சி மன்றாடக் கிருபை செய்வீரே -2 கண்ணீர் விட்டு விண்ணப்பம் பண்ணி -2 வேண்டுதல் செய்யவும் கிருபை செய்வீரே -2
3.பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டும் சிறையின் தொழுமரத்தில் மாட்டப்பட்டும்-2 நடுராத்திரியில் ஜெபம் பண்ணி -2 உம்மைத் துதித்துப் பாடக் கிருபை செய்தீரே -2
4. பவுல் சீலா ஜெபத்தைக் கேட்டு பூமியை மிகவும் அதிர்ச் செய்து -2 சிறைச்சாலையின் கதவுகள் திறக்கவும் -2 கட்டுகள் கழலவும் கிரியை செய்தீரே -2
5. இரவில் பேதுரு சிறைச்சாலையில் கொலைக்காய் அடைக்கப்பட்ட போது -2 சபையார் அநேகர் கூடி அவனுக்காய் -2 ஊக்கமாய் ஜெபிக்கக் கிருபை செய்தீரே -2
6. ஊக்க ஜெபத்தை உடனே கேட்டு உடனே உம் தூதனை நீர் அனுப்பி -2 உம் தாசனாம் பேதுருவை -2 உடனே விடுவித்த எங்கள் தேவனே - 2
7. இரவில் உண்டாகும் உம் அக்கினியிலும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் -2 இயேசுவே எம்மை விலக்கிக் காத்து -2 காலையைக் களிப்புடன் காணச் செய்வீரே -2
8. இயேசுவே இரவில் உம் அக்கினியிலும் பகலில் உம் மேகத்திலும் முன்சென்று -2 இஸ்ரவேலரை நீர் பாதுகாத்தது போல் -2 எம்மையும் எப்போதும் பாதுகாத்தருள்வீர் -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj