இல்லையென்றால் இயேசு
illaiyendraal yesu
இல்லையென்றால் - இயேசு இல்லையென்றால் நானில்லையே - என்னில் ஒன்றுமில்லையே - இல்லை
1. மாமிசமானதோர் வார்த்தையிவர் - தேவ ஆவியினால் எமை நிறைக்கின்றவர் பாவியென் பாதகம் யாவையும் தீர்த்திட ஆணிகள் பாய்ந்திட சிலுவையில் மாண்டவர்
நினைத்து நினைத்து மனதில் களித்து துதித்து துதித்து கரங்கள் குவித்து பாடுவேன் துதி பாடுவேன் - இல்லை
2. மானிடர் பாவம் தீர்த்திடவே - மூன்று ஆணிகள் பாய்ந்திட குருசினிலே நானிலத்தோர் உயர் வானிலம் சேர்ந்திட மானிடனாகி எம் மாபழிதீர்த்ததை - நினைத்து
3. ஒரு முறை உலகினை மீட்கவே வந்தவர் அதிசயம் அற்புதம் ஆற்றிய ஆண்டவர் மறுமுறை வருவார் வானத்தின் வழியே நியாயங்கள் தீர்த்திட தூதருடன் வருவதை - நினைத்து
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam