இலேசான காரியம் நான் பாடினேன்
ilesaana kaariyam naan paadinen
இலேசான காரியம் நான் பாடினேன் - என் அஸ்திபாரம் இயேசு வென்று நான் பாடினேன் நடந்து நான் வந்த பாதையெல்லாம் - என்னை சுமந்த நாதனென்று துதிபாடினேன்
1. என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு - என்னை நேசித்ததேன் என்று சொல்லி பாடினேன் நன்மை கிருபை என்னை தொடர செய்யும் - இயேசு நல்லவர் நல்லவர் என புகழ்பாடினேன்
2. மனிதா மனிதா மானிட வாழ்வென்றும் நிலைப்பதில்லையென்று அன்று பாடினேன் கொஞ்சி கொஞ்சி பேசி மயக்கிடும் உலகில் தஞ்சம் அவர் சிலுவை என்று பாடினேன் - இலேசான
3. ஐயோ ஐயோ நகரம் எரியுமென்றேன் - அன்று நான் செய்த பாவங்கள் தெரியுதென்றேன் - இன்று யார் யாரோ என்பாடல் தமதென்று சொல்லி வர மன்னியும் இயேசையா என் பாடினேன்
4. கேட்டதையெல்லாம் தருவார் இயேசு என்றேன் - எந்தன் இதயம் சுமந்த காயம் குறைவு என்றேன் மலரிதழ் மேலே பனிதுளிப்போலவர் கல்வாரி அன்பில் உருகி பாடினேன்
5. நிலவும் வான்சுடரும் பாடுமென்றேன் - வீண் சலனம் கொண்ட மனம் வாடுமென்றேன் ஏழை என் மனமெங்கும் நிறைந்திருக்கும் - நம் இயேசுவே ஆண்டவர் என்று பாடினேன் - லேசான
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam