எத்தனை நன்மை
ethanai nanmai
எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி கோடி நன்றி
தடுமாறிப்போன நிலையில் தாங்கினீரைய்யா ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி தூக்கினீரய்யா
ஆதி அன்பு எனக்குள்ளே குறைந்து போனதே ஆனாலும் எண்ணாது நன்மை செய்தீரே
மங்கி மங்கி எரிந்தபோதும் அணைக்காதிருந்தீர் நெரிந்து போன நாணல் வாழ்வை முறிக்காதிருந்தீர்
உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய மறந்தேனைய்யா ஆனாலும் சகித்துக் கொண்டு நடத்தினீரைய்யா
வலதுபக்கம் இடதுபக்கம் சாயும்போதெல்லாம் உம் வார்த்தையாலே வழுவாமல் காத்துக் கொண்டீரே
உயிரோடு இருக்கும்வரை உம்மைப் பாடுவேன் உம் அதிசயங்களை எடுத்துச் சொல்லுவேன்
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae