எப்படி எப்படி பார்த்தாலும்
eppadi eppadi paarthaalum
எப்படி எப்படி பார்த்தாலும் இயேசு நல்லவரே இப்படி அப்படி விலகிடாமல் காக்க வல்லவரே
1. கோடரி மரத்தின் வேரின் அருகில் வைத்தவரே கோடரி இரும்பை கூட மிதக்க விட்டவரே கொடியென நான் படம் செடியாய் இருப்பவரே கனிகளும் எனில் மிகுந்திட - அருள் வரம் தரும் உயர் கிருபைகள் மிகும் - எப்படி
2. களைகள் பிடுங்கி தீயில் எறிவேன் என்றவரே களைகளை பயிரின் நடுவில் வளர விட்டவரே களைகளின் நடுவினில் பயிரென வளர்ந்திடுவேன் கதிர் மணியென பதர் பறந்திட களஞ்சியமாகத் சேர்த்துவிடுவார் - எப்படி
3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்றவரே நான் என்னில் இல்லையென்று உணர வைத்தவரே செம்மையான இதயங்கொண்ட நீதியுள்ள மனிதனுக்கு வெளிச்சம் மகிழ்ச்சி விதைத்து வைத்தவர் விரைவில் அதை முளைக்கச் செய்வார் - எப்படி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam