என்னோடு இருப்பவரே
ennodu iruppavarae
என்னோடு இருப்பவரே - இயேசுவே எனக்காக வாழ்பவரே கோடான கோடி உள்ளங்கள் தேடி பாடி மகிழ்ந்திடுமே - உம் பாதம் பணிந்திடுமே
என்னில் வாழ்வது நானுமல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றீர் கர்த்தர் என் பெலனும் கீதமுமானீர் கன்மலையுமானீர் கர்த்தாவே என் நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர் அல்லேலூயா அல்லேலூயா - உம்மில் என்னை மறந்தேனய்யா
காற்றும் கடலும் கல்மழையும் கானம் பாடி போற்றுமே துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும் தூயவர் புகழ் பாடுமே சிறகுகள் அடித்திடும் பறவையுமே சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே அல்லேலூயா அல்லேலூயா - நானும் சேர்ந்து துதித்திடுவேன்
சூரிய சந்திரன் நடசத்திரங்கள் சூழ்ந்து உம்மை போற்றுமே வானிலும் பூவிலும் உள்ளவை யாவும் வாழ்த்தி வலம் வருமே வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ வானவரே உம் மகிமையல்லோ அல்லேலூயா அல்லேலூயா - துதி கனம் மகிமை உமக்கே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia