என்னவென்று
ennavendru
என்னவென்று சொல்லுவேன் எந்தன் இயேசுவே என்ன சொல்லி பாடுவேன் எந்தன் நேசரே ஆயிரம் பேரிலும் சிறந்தவர் நீரே வானிலும் பூவிலும் உயர்ந்தவர் நீரே வார்த்தைகளால் விவரித்திட என்னால் முடியுமோ
1.தேவைகளை அறிந்த நல்ல தந்தை நீரய்யா-2 தேவைகளை சொல்லுமுன்னே தந்தீரய்யா-2 ஆற்றி தேற்றி அணைத்திடும் அன்னை நீரய்யா -2 தியாகமாய் உம்மைத் தந்த தெய்வம் நீரய்யா -2-இயேசையா (4)-2
2. தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தானையா பசி தீர்க்கும் இனியமன்னா நீர்தானையா வானின்று இறங்கி வந்த ஜீவ அப்பமே எனக்குள்ளே ஊரும் ஜீவ நீரூற்றே இயேசய்யா(4)-2
3.ஆபத்திலே உதவிடும் நண்பன் நீரய்யா உயிரையும் கொடுத்து என்னை நேசித்தீரய்யா பிரியமே என்றழைக்கும் நேசர் நீரய்யா பரலோகம் சேர்க்க எப்போ வருவீரய்யா - இயேசய்யா(4)-2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal