என்னை பெத்த ராசாவே
ennai petha raasaavae
என்னை பெத்த ராசாவே - என் கண்ணை போல உன்னை வளர்த்தேன் கண்ணுறங்கிப் போனதென்ன கல்வாரி சிலுவையில் - என்னை
1. கண்ணே நீ கண் திறந்தாய் காரிருள் கலைந்ததையா அன்பே நீ அவதரித்தாய் அந்தகாரம் அகன்ற தையா பெண்ணே நீ பிறந்ததால் பாவமெல்லாம் பறந்ததையா அன்னை எந்தன் தாலாட்டு உன் செவியில் கேட்கலையா ஆராரிரோ...ஆராரிரோ... - என்னை
2. மன்னா நீ உதித்ததால் மண்பதை உயர்ந்ததையா ஐயனே பாடு பட்டாய் பேய் பிணியும் விலகுதையா சிலுவை சுமந்ததினால் சீலமெல்லாம் பெருகுதையா சேயுந்தன் செவியிலே என் குரல் கேட்கலையா ஆராரிரோ..ஆராரிரோ... - என்னை
3. கல்லாகிப்போன மனம் கனியாய் கனிந்திடவே அன்னை எந்தன் மடியினிலே உன் மேனி சாய்ந்ததென்ன மெய்யான போஜனம் மெய்ப்பொருளே என் மகனே தாயெந்தன் தாலாட்டு சேனைக்கு கேட்கலையா ஆராரிரோ...ஆராரிரோ - என்னை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam