என்றும் என் இயேசுவின்
endrum en yesuvin
என்றும் என் இயேசுவின் பாடுகளைத் தியானிப்பேன் - 2 பாவிகட்காய்ப் பாடுபட்ட பரிசுத்தரின் பாடுகளை - 2 - என்றும் என்
பரிசுத்த இரத்தமதைப் பாதகர்க்காய்த் தாம்சிந்தினீர் - 2 பரிதாபமாய்ப் பாடுபட்டீர் வேதனைகள் மிகவடைந்து - 2
அவனியில் அன்பர்தாமே அதிகமான அடிகள் பட்டீர் - 2 அன்பின் கயிறுகளால் சிலுவைதனில் கட்டப்பட்டீர் - 2
பாவங்களுக்குச் செத்து நீதிக்கு நான் பிழைக்கும்படி - 2 சுவி உம் சாரத்திலே என் பாவங்களைச் சுமந்தீர் - 2
என் மீறுதலால் காயப்பட்டு என் அக்கிரமத்தால் நொறுக்கப்பட்டார் - 2 என் சமாதான வாழ்வுக்காய் ஆக்கினைகளை அடைந்தீர் - 2
என் பாடுகளை ஏற்றுக்கொண்டு என் துக்கங்களைச் சுமந்தீர் - 2 என்னை நீர் உம்முடைய தழும்புகளால் குணமாக்குகிறீர் - 2
அசட்டை பண்ணப்பட்டீர் புறக்கணிக்கப்பட்டீர் - 2 நெருக்கப்பட்டீர் ஒடுக்கப்பட்டீர் மாம்சமது பிட்கப்பட்டீர் - 2
குற்றமில்லாத மாசற்ற கிறிஸ்து இயேசுவே நீர் - 2 குற்றவாளியாம் எனக்காய்ப் பரிதாபமாய் பலியானீர் - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj