எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
endhan vaanjai uyar seeyonae
எந்தன் வாஞ்சை உயர் சீயோனே! உந்தன் மகிமை என்று காணுவேன்!!
1.பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமே பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே துதிக்கப் பதினாயிரம் நாவு வேண்டுமே துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே- எந்தன்
2.மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே சீருடை தரித்த கெம்பீர சபையோர் சிறப்பாய் மகிழ்ந்தங்கு நிற்பாரே- எந்தன்
3.வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு வனப்புடன் நிற்கும் சீயோனே! இயேசு ராஜனின் சத்திய நகரமே சிலுவையே உந்தன் அஸ்திபாரமே- எந்தன்
4.பரிசுத்தமே தன் எழில் எல்லையே பரம தேவனின் வாசஸ்தலமே பரிசுத்தவான்கள் பலகோடி வாழும் பரலோகமே இன்ப சீயோனே- எந்தன்
5.மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே மணவாட்டியாம் என் மகிழ்ச்சி அங்கே ஆயத்தப்படுத்தின உன்னிடமே எப்போது நான் வந்து சேர்வேனோ?- எந்தன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb C Bb F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F F Bb C Am Dm F Bb Gm C F
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal