என்ஆத்தும நேசரை நான்
enaathuma nesarai naan
தொகையறா என்ஆத்தும நேசரை நான் எங்கெல்லாம் தேடுவதோ என்னெதிரில் கண்டவரை வழிநெடுக கேட்டுவிட்டேன் நெருப்பாக கொதிக்கும் எந்தன் நெஞ்சத்தைக் குளிரச் செய்ய - என்று வருவாரோ தெரியவில்லை வேதனையில் ஆழ்ந்துவிட்டேன்
என் ஆத்ம நேசரை நான் தேடினேன் எங்கேயும் காணாமல் நான் வாடினேன் எவரேனும் பார்த்ததுண்டோ எனக்கின்று சொல்லுங்கள் அவரின்றி வாடும் என்னை அன்போடு தேற்றுங்கள்
1. வான வீதியிலே உலாவும் மேகக் கூட்டங்களே - எந்தன் ஞான சிருஷ்டிகரை கண்டீரோ வேகம் கூறுங்களேன் சற்று முன்பு வாசற்கதவை தட்டிச் சென்றவர் - நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை விட்டுச் சென்றவர் (என் ஆத்ம)
2. நதியின் ஓரம் தங்கும் புறா போல் கண்கள் அமைந்திருக்கும் - வாசம் அதிகம் வீசும் புஷ்பம் போல கன்னம் மலர்ந்திருக்கும் தங்கமயம் தலையில் இருக்கும் அங்கம் யானைத்தந்தம் போல அமைந்த நேசர் காணவில்லை அறிந்த யாரும் சொல்லுங்கள்
3. தேவ புகழினையே பாடும் பறவைக் கூட்டங்களே - எந்தன் பாவம் தீர்த்தவரைக் கண்டீரோ பதிலைக் கூறுங்களேன் படர்ந்து காணும் கொடியே நீ சொல் பாரில் வீசும் காற்றே நீ சொல் வளர்ந்து நிற்கும் மரமே நீ சொல் சிவந்த எந்தன் நேசர் எங்கே?
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal