என் இயேசுவே என்னோடு பேசிடும்
en yesuvae ennodu pesidum
என் இயேசுவே என்னோடு பேசிடும் உமது வழியில் என்றும் நான் நடந்திட பேசிடும்
1.வேதம் குறைவற்றதே, ஆத்துமா உயிர் பெறுதே சத்தியம் சாட்சியாய் உயர்ந்திடுதே பேதையை ஞானியாய் மாற்றிடுதே- என் இயேசுவே
2.தேனினும் மதுரமதே தெளிதேன் மதுரமதே மகிமை மாட்சிமை மன்னவர் நீரே மகிழ்ச்சியின் கிரீடம் கிடைத்திடுதே- என் இயேசுவே
3.வேதனை நீங்கிடவே போதனை செய்திடுதே வசன தீபம் எரிந்திடவே இருளின் வழி என்றும் மாறிடுதே- என் இயேசுவே
4.இயேசுவின் வார்த்தையிதே குறைவை நிறைவாக்குதே ஆசீர்வாதம் நிறைவாய் பொங்கிடவே மீதியும் நிறைந்து செழித்திடுதே- என் இயேசுவே
5.மெய்வழி நடந்திடவே நித்தமும் பேசிடுமே பின்மாரி மழை இன்று பொழிந்திடவே மெல்லிய குரலோடு பேசிடுமே- என் இயேசுவே
6.சபை நிதம் வளர்ந்திடவே ஆகாரம் அளித்திடுமே சந்தோஷம் பொங்கி பெருகிடவே அறுவடை ஆட்களை எழுப்பிடுமே- என் இயேசுவே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal