என் குடும்பம் ஏழை என்று
en kudumbam ezhai endru
என் குடும்பம் ஏழை என்று சொல்லாதே உழைக்கும் குடும்பத்தில் தழைத்தோங்குவாய்
1. துளிர் விடும் குடும்பமாய் எழில் பெறுவாய் இயேசுவின் ஆறுதல் நிழல் நீங்காதே கர்த்தரின் வழியில் அற்புதம் கண்டு மனம் மகிழ்ந்து இயேசுவை புகழ்வாய்
2. அன்பு சந்தோஷம் சமாதானம் தங்கும் நீடிய பொறுமை தயவு நற்குணமே விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமாக்கி ஆவியின் கனி அனைத்திலும் மகிழ்வாய்
3. கீழே வேர்பற்றி மேலே செழித்தே நீர்ப்பாய்ச்சலான தோட்டமாகியே வற்றாத நீருற்றில் வளமாய் வாழ்ந்து இயேசுவின் மணம் வீசும் குடும்பமாவாய்
4. நித்திய காலமாய் நிலைபெற்றிருந்து ஈரம் காயாத மண்ணின் முனையாய் இடைவிடாமல் வளர்ந்தோங்கி என்றும் கட்டுகோப்பான குடும்பமாவாய்
5. கண்ணீர் விடாத வாழ்வு அடைந்தே கண்ணியமான பரம்படையடைந்தே முக மலர்ச்சியில் அகமகிழந்ததே மிகுந்த திரவிய செல்வந்தனாவாய்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal