என் தேவனே என் இயேசுவே
en devanae en yesuvae
என் தேவனே என் இயேசுவே மா துரோகியாம் என்னை இரட்சித்தீரே
பாவ சாப தோஷங்கள் நீக்கிப் பரிவுடன் இரட்சித்தீரே ஆறுதலோடு அவனியில் வாழ அடிமை எனக் கிரங்கினீரே
என்னைத் தேற்றித் தாங்கி நடத்தும் எந்தன் இயேசு தேவனே என்னை ஏந்திச் சுமந்து தப்புவித்து என்னைக் காத்திடும் என் இன்ப தேவனே
உலகத் தோற்றத்திற்கு முன் என்னை முன் குறித்தீரே அடியான் உமக்கு ஊழியம் செய்ய உலகினில் என்னை உருவாக்கி வைத்தீரே
உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ என்றார் அடியானை என்னிடம் : உன்னை அனுப்புகிறவர் நானல்லவா என்றீரே
உன்னைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்வேன் என்றீரே என்னைக் கொண்டு பெரிய காரியங்களை சத்திய சபையில் அதிகமாய்ச் செய்வீரே
நீ சிறியவனென்றா எண்ணுகிறாய் என என்னிடம் கேட்டீரே நீ சிறியவனல்ல பெரியவன் உலகத்திற்குப் பெரியவன் என்றீரே
விசேஷித்த ஞானம் புத்தியும் அறிவும் தருவேன் என்றீரே அவனியில் ஆத்துமாக்கள் மீட்புக்காய் அடியானையும் அன்பால் வைத்தீரே
அதிசயங்கள் அற்புதங்கள் அதிகமாய்ப் பெருகச் செய்வீர் அதிசயமாம் உம் திரு நாமம் அனைவரும் அறியக் கிரியை செய்திடுவீர்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj