ஈன புத்தி படைத்தவனே
eena puthi padaithavanae
ஈன புத்தி படைத்தவனே யூதாஸ்காரியோத்து - இந்த கோணபுத்தி எப்படி வந்துச்சு சொல்லு காரியோத்து -(2) காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ்காரியோத்து -(2) இயேசுவை காட்டி கொடுத்தாயடா யூதாஸ் காரியோத்து -(2)
முந்தி முந்தி பேசி திரிந்த சீமோன் பேதுரு - நீ மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு -(2) ஜாமக்கோழி கூவும் முன்னே சீமோன் பேதுரு -(2) இயேசு அறியேன் என்று சத்தியமடிச்ச சீமோன் பேதுரு -(2)
நெஞ்சு மேல சாஞ்சுறங்கின யோவான் அண்ணே - இப்போ அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச யோவான் அண்ணே -(2) துண்டக் காணோம் துணிய காணோம்னு ஓடின அண்ணே - -(2)-இப்போ துணிவு உனக்கு எங்கே போச்சு சொல்லுங்க அண்ணே -(2)
அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே இப்போ தந்திரமா ஓடி போனது எங்கே ஐயாவே -(2) சொர்க்க வழியக் கேட்டு தொலைச்ச பிலிப்பு அண்ணே -(2) இப்போ பக்கவழியா ஓடிப் போனது எங்கேங்க அண்ணே -(2)
தோளு மேலே சாஞ்சுறங்கின தோமா தாத்தாவே- இப்ப ஏமாற்றும் மாந்தர்களில் ஒருவனானாயே -(2) தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே -(2)- இந்த தரணி மீட்ட தேவ அன்பை மறந்த தாத்தாவே -(2)
ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு இந்த தரணியிலே நல்லவராய் நன்மை செய்த நம்ம இயேசு ஆண்டவராம் நம்பு அவரை நம்பு தெம்பு அதுவே தெம்பு
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae