எதற்கும் கலங்காத
edharkum kalangaadha
எதற்கும் கலங்காத உள்ளம் தாருமே உமக்குள் களி கூர்ந்து மகிழவேண்டுமே நினைக்கும் நேரமெல்லாம் துதிக்க வேண்டுமே - நான் படைக்கும் பலிகளை நீர் ஏற்கவேண்டுமே - எதற்கும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
1. பறவை மிருகம் தாவரங்கள் கலங்குவதில்லை புல்லின் பூவும் அழகுக்காக ஏங்குவதில்லை படைத்தவரே போஷிப்பதால் பயப்படுவதில்லை நாளைய தினம் குறித்த கவலை அவைகளுக்கில்லை-அதை நினைப்பதுமில்லை எதற்கும்
2. காட்டு மலரை அலங்கரிக்கும் கர்த்தரின் கரங்கள் கெட்ட மனிதர் எமை அணைக்க தயங்கியதில்லை நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறியதில்லை ஏற்றுக்கொண்டநாள் முதல் எமை மறந்தது இல்லை-கண் உறங்கினதில்லை
3. சிலுவை பாதை தொடர்ந்து நடக்க அஞ்சுவதில்லை மயக்கும் மாம்ச சிந்தை என்னை மிஞ்சுவதில்லை கிறிஸ்துவுக்குள் இருப்பதினால் சாத்தான் தொடுவதில்லை இனிக்கும் வேத வார்த்தையை நான் மறப்பதுமில்லை-யாரும் மறுப்பதுமில்லை
4. வருகை நாளுக்காயத்தமாய் இருப்பதினாலே - எனை பரிசுத்தமாய் தூய ஆவி காப்பதினாலே - பிர தான தூதன் எக்காளம் தொனி ஒலித்திடும் வேளை சிங்காசம் அமர்ந்தவரின் அருகினில் இருப்போம் என்றும் அவருடன் அமர்வோம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam