தேவ அசீர்வாதம் உன் மேல்
deva aseervaadham un mel
தேவ அசீர்வாதம் உன் மேல் வரும் நீ பூமியில் மேன்மை அடைவாய்
1. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவாய் நீ வெளியிலும் அசீர்வதிக்கப்படுவாய்
2. கர்ப்பத்தின் கனி என்றென்றும் உன்னை சேரும் நிலத்தின் கனி உனக்கு என்று கிடைக்கும்
3. கூடையும் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும் சகல காரியமும் ஆசீர்வாதாமாய் இருக்கும்
4. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பாய் நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பாய்
5. உனக்கு விரோதமாய் எழும்புவோர் எல்லாம் ஏழு வழியாய் உன்னை விட்டு ஓடிப்போவார்கள்
6. உன் களஞ்சியங்கள் நிறைந்தேயிருக்கும் நீ கையிடும் வேலைகள் ஆசீர்வாதம் பெற்றிருக்கும்
7. உன் இல்லத்தில் ஆசீர்வாதம் என்றும் தங்கும் நீ இயேசுவின் வழியிலே என்றுமே மேல் நடப்பாய்
8. தேவன் உனக்கு ஆணையிட்டபடியே நீ பரிசுத்த ஜனமாய் என்றும் நிலை நிற்பாய்
9. இயேசுவின் நாமம் உன்னில் என்றென்றும் விளங்கும் பூமியின் ஜனம் உனக்கு பயப்பட்டிருக்கும்
10. பரிபூரண நன்மையால் வாழ்ந்திருப்பாய் நல்ல பொக்கிஷம் உன் இல்லத்திலிருக்கும் 1 1. நீ கடன் கொடுக்கும் நிலையிலே வாழ்வாய் நீ ஒரு போதும் கடன் வாங்கமாட்டாய் 1 2. நீ வாலாகமால் தலையாய் வாழ்ந்திடுவாய் நீ கீழாகாமல் மேலாய் வாழ்ந்திடுவாய்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal