ஆனந்த துதி ஒலி கேட்கும்
aanandha thudhi oli ketkum
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…
1. மகிமைப் படுத்துவே னென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம் கறையில்லா தேவனின் வாக்கு – ஆ (2)
2. ஆதிநிலை ஏகிடுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் – ஆ (2)
3. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாகத் தேவன் அருள்வார் – ஆ (2)
4. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் பணிவோம் அனாதி தேவனே அடைக்கலம் பாரினில் அனாதையாவதே இல்லை – ஆ (2)
5. பார்போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்கியம் நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும் பரிசுத்த மாளிகை எழும்பும் – ஆ (2)
6. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் – ஆ (2)
7. தாவீதின் மைந்தன் தலையவர் தாசரின் தலைகள் வணங்கும் தேடிடும் தாசரின் கனம் தேவாதி தேவனின் தியானம் தலைவர்கள் எழுவார் எளியோறும் உயர்வார் பணியாளர் திரண்டெழும் ஆண்டு – ஆ (2)
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal