ஆதியில் வார்த்தையானவரே
aadhiyil vaarthaiyaanavarae
ஆதியில் வார்த்தையானவரே மேதினியைப் படைத்த நாயகனே உம்மை பாடாத நாளில்லை மனதில் களித்து இதழ்கள் குவித்து பாடுவேன்
1. சந்திரன் சூரியன் உருவாகு முன்னே தன்னில் தானே ஒளியாக நீன்றீர் நீரது புவியது தனி தனி பிரித்தது வார்த்தையினால் அன்றோ பாடும் பறவையினம் நீந்தும் மீன்கள் நாதா நின்புகழ் பாடலையோ
2. வாக்கின் கோலாலே எதிரியை துரத்தி - தம் தாசனின் கோலாலே கடல் நீர் பிரித்து காற்றும் கடலும் மீன் கீழ்படிவதும் வார்த்தையினால் அன்றோ காடும் மலைத்தொடரும் வான வெளிச்சுடரும் தேவா உம் புகழ் கூறலையோ
3. வானத்து விண்ணோளி கிழக்கினில் தோன்ற வானவரே நீர் வெளிப்படும் நாளில் வானமும் பூமியும் ஒழிந்திடும் என்பது வார்த்தையினால் அன்றோ தூதர்கள் காகளம் வானங்கள் அதிர்ந்திட இயேசுவே நீர் வாருமையா
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam