இயேசுவின் ஊழியம் அன்பரின்
yesuvin oozhiyam anbarin
இயேசுவின் ஊழியம் அன்பரின் ஊழியம் ஸ்தோத்திரம் செலுத்துவேன் அன்பர் இயேசுவின் மகத்துவ செயல்களை வந்து பாருங்கள் - (2)
வாருங்கள் வாருங்கள் புவியின் மாந்தரே திரளாய் கூடுங்கள் உங்களின் கண்ணீரை இயேசு இரட்சகர் மகிழ்ச்சியாய் மாற்றுவார் - (2)
பாவ சேற்றினில் மூழ்கி தவித்து அனுதினம் அழுதீரோ கலங்கவேவேண்டாம் - சிலுவை இரட்சகர் இயேசு மன்னிப்பாரே - (2)
வியாதி துன்பம் அகோர காயங்கள் கலங்க வைத்ததோ பரம வைத்தியர் இயேசு இன்றே உன்னை குணமாக்குகிறார் - (2)
அநீதிகொடுமை கடனின் பாரங்கள் அனுதினம் அழுத்தினதோ வருத்தம் வேண்டாம் உந்தன் பாரத்தை இயேசு நீக்குகிறார்
மூப்பு தனிமை வேலையின்றி தவித்து நின்றீரோ அன்பின் கிருபை வள்ளல் இயேசு இன்றே சந்திப்பாரே- (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal