ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால்
oruvan yesuvil anbaayirundhaal
ஒருவன் இயேசுவில் அன்பாயிருந்தால் இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்கிறான் இயேசுவில் அன்பாயிராதவன் இயேசுவின் போதனையை புறக்கணிக்கிறான் உயிருள்ள வார்த்தைகளை புறக்கணிக்கிறான்
இறைவனால் உண்டானவன் இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமுள்ள போதனைக்கு அன்பின் அறிவுரைக்கு செவிசாய்க்கிறான் சத்தியத்தை அறிந்தவன் விடுதலை அடைகிறான் உண்மையை உணர்ந்தவன் துணிவோடு வாழ்கிறான் வேதமில்லையேல் வெற்றியில்லையே இயேசுவின் போதனை தான் மோட்சம் செல்லும் பாதையாம்
தெய்வத்தின் வார்த்தையை மீறுகின்ற பரம்பரை நம்பிக்கைகள் மூட மரபுகளை இயேசு கிறிஸ்து வெறுக்கின்றாரே கடவுளின் மனதினை புரிந்திடுவோம் கடவுளின் விருப்பம் செய்திடுவோம் கடவுளை தள்ளி அவர் வார்த்தையை மறுத்தால் அந்த வார்த்தையையே நாம்மை நியாயம் தீர்க்கும்
மனிதனின் வார்த்தைக்கு கீழ்படிவதைவிட கடவுளின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து கீழ்ப்படிந்து நடக்க கடவுள் சொன்னாரே திருச்சபை போதகர் சொல்லித் தந்ததை மறைநூல் வாசித்து ஆராய்வோம் உண்மையை உணருவோம் அறிந்தபின் திருந்துவோம் உண்மை ஒருநாள் ஜெயிப்பது நிச்சயம்
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal