ஓரு கதையை போல என் நாட்கள்
oru kadhaiyai pola en naatkal
ஓரு கதையை போல என் நாட்கள் முடிந்தது நான் நடந்த பாதைகள் எல்லாம் மறைந்து போனது - 2
மாயை மாயை எல்லாம் மாயை காணும் உலகில் எல்லாம் மாயை - 2 காண்பதெல்லாம் மாயை இந்த உலகிலே நீ திரும்பி போக போகிறாய் வந்த நிலையிலே - 2 - ஓரு கதையை
எனது நாட்கள் எழுபது வருடம் பெலத்தின் மிகுதியால் எண்பது வருடம் வருத்தமும் சஞ்சலமும் வாழ்க்கையின் அங்கம் நிலையானதொன்றும் இல்லை பூமியிலெங்கும் - 2 சீக்கிரமாய் என் நாட்கள் கடந்து போகுதே என் ஆவிக்கூட என்னை விட்டு பிரிந்து போகுதே - 2 - காண்பதெல்லாம் மாயை
வேஷமாகவே மனுஷன் திரிக்கிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் ஆஸ்தியை மிகுதியாய் சேர்த்து வைக்கிறான் எதுவுமே சொந்தமில்லை ஏற்க மறுக்கிறான் - 2 நொடி பொழுதில் உன் வாழ்க்கை முடிந்து போகுது இமை பொழுதில் நம் கனவும் களைந்து போகுது - 2 - காண்பதெல்லாம் மாயை
பூமி வாழ்க்கை நிரந்தரம் இல்லை ஒன்றும் நமக்கு சொந்தமில்லை ஓரு நாள் வாழ்வை இன்பமாக எண்ணி போகாதே என் இயேசுவையும் தள்ளி-2 இயேசுவிடம் உள்ளது உண்மை சத்தியம் இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் நிச்சயம் - 2 - காண்பதெல்லாம் மாயை
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega