நற்செய்தி ஊழியம் பெருகிடவே
narseydhi oozhiyam perugidavae
நற்செய்தி ஊழியம் பெருகிடவே துர்செய்தி தேசத்தில் அகன்றிடவே உழைத்திடுவோம் உரைத்திடுவோம் ஊரெங்கும் தேவ அன்பை பகிர்ந்தளிப்போம் இயேசு கிறிஸ்துவுக்காய் எழும்பி பிரகாசிக்க நற்செய்தி ஊழியம் செய்திடுவோம்
அன்பின் நற்செய்தியை அறிவிக்கவே பாரில் அன்பராம் இயேசுன்னை அழைக்கின்றாரே அவசரமாக அவசியமாக அர்ப்பணிப்போடு நாம் உழைத்திடுவோம்
சிலுவையின் சுவிசேஷம் அறிவிக்கவே தேவ கிருபை உள்ளோரை இயேசு அழைக்கின்றாரே சிலுவையின் ரத்தம் தரும் பரிசுத்தம் சிலுவையின் மீட்பை நாளும் உரைத்திடுவோம்
நாடுகள் நற்செய்தியால் நிரம்பியதால் எல்லா வீடுகள் சபைகளாய் மாறிடவே முழங்கால்கள் யாவும் முடங்கிடும் நேரம் நாவுகள் இயேசுவை அறிக்கை செய்யும்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi