கர்த்தரையும் அவர் வசனத்தையும்
kartharaiyum avar vasanathaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும்.. ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா...
கர்த்தரையும் அவர் வசனத்தையும் ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2
1.வானமும் பூமியும் ஒழிந்து போகும் வார்த்தை ஒழியுமோ-2 பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ-2
ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே-2 கட்டளைகளும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும்
2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ-2 தங்கத்தை விட தேனையும் விட ஒசந்ததல்லவோ-2
ஆண்டவரின் வசனம் அதில் மனது மகிழுமே-2 கீழ்ப்படிஞ்சு நடந்தா என்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும்
3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே-2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே-2
பேதைகளுக்கெல்லாம் அது ஞானம் கொடுக்குமே-2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு விடுக்குமே-2-கர்த்தரையும்
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa