அன்றாடம் அன்றாடம்
andraadam andraadam
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினர் அன்போடு நடத்தி வந்தீர் அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினர் எந்நாளும் நடத்திடுவீர்
பேர் சொல்லி அழைத்து பிள்ளை என்றணைத்து பின்பற்றச் செய்தீரைய்யா ஆவியில் நிறைத்து அல்லல்கள் குறைத்து ஆசீர்வதித்தீரைய்யா
எங்களை நீர் நினைப்பதற்கும் எங்களை விசாரிப்பதற்கும் நாங்கள் எம்மாத்திரம் தேவா
மேன்மையானதே மகத்துவமானதே வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே
ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே உமக்கு முன்பு நான் மாயை மாயையே நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே
தொலைந்த மனிதரை தேடினீரைய்யா தவறும் மனிதரை தாங்கினீரைய்யா பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa
- ஆயத்தாமா ஆயத்தாமாaayathaamaa aayathaamaaBro. RaviBharath · Aayathamaa