கையளவுமேகம் கண்களில்
kaiyalavumegam kangalil
கையளவுமேகம் கண்களில் தெரியுதே பெருமழை இரைச்சல் செவிகளில் கேட்குதே (2)
மழை பெய்யுதே (2) அபிஷேக மழை இன்று பெய்யுதே மழை பெய்யுதே (2) அக்கினி மழை இன்று பெய்யுதே
மின்னல்கள் இடிமுழக்கம் எக்காளங்கள் தொனிக்குதே கர்த்தர் சபைநடுவில் அக்கினியாய் எழுந்தாரே (2) மகிமையின் மேகம் எங்கும் ஆலயத்தை நிறைக்குதே தேவனின் பிரசன்னம் நம்மையெல்லாம் நிரப்புதே
பலிபீட அக்கினியால் பாத்திரங்கள் நிரம்புதே கர்த்தரே தெய்வம் என்ற கர்ஜனைகள் தொனிக்குதே (2) இருமன நினைவெல்லாம் நம்மை விட்டு விலகுதே ஒருமனம் ஒற்றுமை நம்மையின்று மூடுதே
அபிஷேக அக்கினியின் காற்று நம்மேல் வீசுதே ஆவியானவர் அசைவாட வந்தாரே (2) ஒழுங்கீனம் குறைகளெல்லாம் நம்மைவிட்டு மறையுதே கர்த்தர் எதிர்பார்க்கும் பரிசுத்தம் நிரப்புதே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae