இயேசைய்யா உம் நாமம்
iyesaiyyaa um naamam
இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா
எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்
பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்
இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா
மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa