ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்
gnaaniyaay sutrithirindhaalum
ஞானியாய் சுற்றித்திரிந்தாலும் பேரோடு புகழை சேர்த்தாலும் அரண்மனைகள் கட்டினாலும் மனதில் ஏக்கம் தீராதே சாலொமோன் ராஜா ஆனாலும் சகலமும் உன் வசம் என்றாலும் கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது
வாழ்வு சாவு எது வந்தாலும் தேவனோடு மனம் கொண்டாடும் கொண்டு வந்ததில்லை கொண்டும் போவதில்லை சேர்த்து வைப்பதில் பயனில்லை ஆசை நூறு நீ கொண்டாலும் தேவன் நினைத்தாலே கை கூடும் ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ உனக்கு வழி இல்லை எந்நாளும்
ஞானி இங்கு தேவன் இல்லை செல்வன் ஏழை வேறு இல்லை நாளை என்பது கையில் இல்லை இங்கு எல்லாமே மாயை என்றும் வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை ஓட்டம் இங்கு ஓய்வதில்லை வாழ்க்கை வாழும் அனைவருக்கும் தேவன் உறுதுணையே என்றும்
இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம் இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம் துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம் கடல் எனும் கண்ணீர் கடந்திடலாம் இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம் இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம் துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம் இது போதும் என்றே நினைத்திடலாம்-வாழ்வு சாவு
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal