எப்பத்தா திறக்கப்படுவதாக
eppathaa thirakkappaduvadhaaga
எப்பத்தா திறக்கப்படுவதாக - 4 வானம் திறந்து தெய்வம் பேசணும் வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக - 4
1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன் என்று சொன்னவரே ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன் என்று உரைத்தவரே தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து - 2 திறக்கச் செய்பவரே என் வாசல்கள் திறக்கச் செய்பவரே
2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே கர்ப்பத்தைத் திறக்கலையோ... அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து தீர்க்கனாய் எழுப்பலையோ... இல்லாதவைகளை இருப்பவைப்போல - 2 அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே உருவாக்கித் தந்தருளும்
கூடுதல் சரணங்கள் 3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க வானங்கள் திறக்கலையோ! கையளவு மேகத்தால் பெருமழை பொழிய அற்புதம் செய்யலையோ! என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை - 2 கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே கிருபையாய் பொழிந்தருளும்...
4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து அற்புதம் பெறவில்லையோ குருடரின் கண்களும் உம் கரம் படவே பார்வை பெறவில்லையோ.. ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட - 2 அற்புதம் செய்தருளும் என் இயேசுவே அற்புதம் செய்தருளும்
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri