என்னை யாரென்று எனக்கே
ennai yaarendru enakke
என்னை யாரென்று எனக்கே இன்று அடையாளம் காட்டினீர் வெறும் மண் என்று உதிரும் புல்லென்று எனக்கே நினைவூட்டினீர்
என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால் வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல வழியையும் தவறி அலைந்தேன் - நான் தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்
நானாய் நடந்த சில வழிகள் - இன்று வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன் அகத்தினுள் படிந்த கறைகள் - இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள்
வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா உந்தன் வழியில் என்னை நடத்தும் - இன்றே எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி பொருத்தும் முற்றிலும் திருத்தும்
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa