எந்தன் சிலுவையை சுமந்து
endhan siluvaiyai sumandhu
எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு உம் பாத சுவடுகள் பின் செல்லுவேன் (2) எந்தன் சுயத்தை வெறுமையாக்கி (2) உந்தன் சித்தம் நான் செய்திடுவேன் (2)
சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை பாடுகள் இல்லையேல் ஆளுகையில்லை (2) எந்தன் கஷ்டங்களில் கண்ணீரின்பாதையில் உந்தனை கண் நோக்கிடுவேன் (2)
உந்தன் காயத்தின் தழும்புகளை எந்தன் சரீரத்தில் தரித்துகொண்டேன் (2) உந்தன் பாடுகளின் பாதைகளில் விரும்பியே என்னை இணைத்துக்கொண்டேன் (2)
எப்பக்கத்தில் நான் நெருக்கப்பட்டாலும் ஒடுங்கி நான் ஒருபோதும் போவதில்லை (2) கலக்கங்களில் மனம் முறியும் வேளையில் சோர்ந்து நான் போவதில்லை (2)
பொன்னைப்போல நான் புடமிடப்பட்டாலும் உத்தமனென்று (உத்தமியென்று) நான் விளங்கிடச்செய்யும் (2) சோதனையை எந்தன் சாதனையாக்குவீர் ஜீவகிரீடம் சூடிடச்செய்வீர் (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae