ஆளுகை என்றும் உம்மிடம்தான்
aalugai endrum ummidamdhaan
ஆளுகை என்றும் உம்மிடம்தான் ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும் இயேசுவே உம் செயலே தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும் இயேசுவே உம் சொல்லிலே
விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6) யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10)
ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39) உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35) ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18) உம்மிடம் வாதம் செய்பவன் யார்
புவியில் உந்தன் ஆளுகை பூக்களில் உந்தன் ஆளுகை அண்டம் முழுவதும் ஆளுகை அணுவிலும் உந்தன் ஆளுகை மனிதன் மீதும் ஆளுகை மிருகம் மீதும் ஆளுகை கிரகம் மீதும் ஆளுகை கிருமியின் மீதும் ஆளுகை எங்கும் உந்தன் ஆளுகை என்றும் உந்தன் ஆளுகை நன்றே உந்தன் ஆளுகை ஆளுகை
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa