வருக வருக
varuga varuga
1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2) தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே - இன்றே தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே - தினமும் புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2) பாத்திரர் தோன்றட்டும் அற்புதம் நடக்கட்டும் பிசாசுகள் ஓடட்டும் கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
2. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2) தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே - இன்றே தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே - தினமும் ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2) அற்புதம் காணட்டும் அதிசயம் தோன்றட்டும் இயேசுவே மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
3. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2) தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே - இன்றே தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே - தினமும் பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2) அற்புதம் காணட்டும் அதிசயம் தோன்றட்டும் இயேசுவே மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2) ஆமென். . .
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal