வல்லமையின் ஆவியானவர்
vallamaiyin aaviyaanavar
வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்து விட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன்
பவர் (power) ஆவி எனக்குள்ளே - அந்த பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே - நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை
கட்டுப்பாட்டின் ஆவியானவர் என்னை கண்ட்ரோல் (Control) பண்ணி நடத்துகிறார் இஷ்டம் போல அலைவதில்லை அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான் தெருத் தெருவா மணம் வீசுவேன் மீட்புபெறும் அனைவருக்கும் - நான் வாழ்வளிக்கும் வாசனையானேன்
உலகத்திற்கு வெளிச்சம் - நான் ஊரெல்லாம் டார்ச் (Torch) அடிப்பேன் உப்பாக பரவிடுவேன் - நான் எப்போதும் சுவை தருவேன்
கர்த்தரின் முத்திரை என் மேல் - நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம் அச்சாரமாய் ஆவியானவர் - நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
தேவனாலே பிறந்தவன் நான் எந்த பாவமும் செய்வதில்லை கர்த்தரே பாதுகாக்கிறார் தீயோன் என்னை தீண்டுவதில்லை
கடவுள் எனக்கு வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவரென்று நிச்சயமாய் நம்பினதாலே - நான் நம்பிக்கையில் வல்லவனானேன்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal