அசட்டை பண்ணாதே
asattai pannaadhae
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே
அனல்மூட்டு, எரியவிடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ - அசட்டை
ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை அனுதினம் நீ பேசினால் வல்லமை வெளிப்படும் வரங்கள் செயல்படும்
அசட்டை பண்ணாதே அசதியாயிராதே - அசட்டை
திருவசனம் நீ தினம் தினம் வாசி சப்தமாய் அறிக்கையிடு பெருகிடும் உன் ஊற்று அது நதியாய் பாய்ந்திடும்
வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் வேகமாய் வருவார்கள் - உன் (உன்) கண்கள் அதைக் காணும் (உன்) இதயம் அகமகிழும் - எழுந்து ஒளி
நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம் நாள்தோறும் நீ பாடினால் கட்டுக்கள் உடைந்திடும் கதவுகள் திறந்திடும்
கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள் பலிபீடத்தில் ஏறும் மகிமையின் தேவாலயம் மகிமைப்படுத்துவேன்
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த தேசமாய் மாறிடுவான் துரிதமாய் செய்திடுவார் ஏற்றகாலத்திலே - கர்த்தர்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலையில் உம் திருமுகம் தேடிadhigaalaiyil um thirumugam thediFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal