வாழ்க வாழ்க பாரத தேசம்
vaazhga vaazhga paaradha thesam
வாழ்க வாழ்க பாரத தேசம் வாழ்க வாழ்க பாரத தேசம் - (2)
1. கட்சி கொடிகள் பல பல வகையாம் தேசக் கொடியை காக்கவே அவையாம் - (2) பாரத தேசம் சுதந்தர தேசம் எத்தனை சலுகை! எத்தனை உரிமை!
2. நாவின் மொழிகள் பல பல உண்டு உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ - (2) அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே
3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம் அனைத்து இந்தியர் சமமென வேண்டும் - (2) ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம் விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்
4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர் நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் - (2) அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்
5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம் வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் - (2) கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்
6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம் மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் - (2) சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம் அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்
7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் - (2) அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal