உன்னத அனுபவத்தில் என்னை
unnadha anubavathil ennai
உன்னத அனுபவத்தில் என்னை அழைத்து சென்றிடுவீர்
தேவனே என் இயேசுவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெலனே என் கோட்டையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா
கருவில் என்னை தெரிந்து கொண்டு முன் குறித்தீரே - இரத்தத்தினாலே நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே கர்த்தாவே உந்தன் கிருபைகளாலே என்றும் என்னை சூழ்ந்திடுவீர் கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்
மூன்றாம் வானம் வரையில் என்னை எடுத்துச் சென்றிடுவீர் தூதர்கள் பேசும் - பாஷைகள் பேசி ஆராதிக்கச் செய்திடுவீர் கேருபீன்கள் சேராபீன்கள் பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன் அவர்களோடு நானும் சேர்ந்து ஆவியில் நிறைந்து பாடிடுவேன்
ஆபிரகாமை அழைத்து அவரை ஆசீர்வதித்தவரே - ரெகோபோத்தாக ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே யாக்கோபை ஆசீர்வதித்தது போல என்னையும் ஆசீர்வதித்திடுவீர் யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai