உங்க கிருபையின் பூரணத்தால்
unga kirubaiyin pooranathaal
1. உங்க கிருபையின் பூரணத்தால் என் உள்ளம் பொங்கிடுதே உங்க கனிவான கருசனையால் மனம் முழுமையாய் நிறைந்திடுதே உயர் உன்னத கர்த்தனே உத்தம நற்போதனே உம் உன்னத அழைப்பினால் என்னை உமக்கென தெரிந்தெடுத்தோனே உம்மோடு என்றும் தங்கவே உம் குரல் என்றும் கேட்கவே உம் கரம் பிடித்தென்றும் நடக்கவே உம் செயல் உற்று நோக்கவே ஈயும் ஈயும் உந்தன் வெளிச்சமே என் மனதின் கண்கள் பார்வையடையவே
2. தாலாட்டு பாடும் தாயாக கூட தோள்மீது சுமக்கும் தந்தையாக கூட மறைந்தே என்னோடு வாழும் மகத்தான நேசரே மனதார பாடிடுவேனே மறவாத உம்மையே வாழ்ந்தாலும் அது உம்மோடு மரித்தாலும் அது உம்மோடு உம்மை இப்போ இப்போ பார்க்க வேண்டுமே உம்மோடு இப்போ இப்போ பேச வேண்டுமே
3. நாளெல்லாம் தேடி எங்கோ நான் போனேன் நன்மைகள் ஏது என்று தெரியாமல் போனேன் கண்முன்னே நின்றீரே கனிவோடு பார்த்தீரே காணாத இறையருளே என் கண்முன்னே நின்றிரே என் நிரந்தரமான காதலே உம் காதலும் பொய்யாய் போகாதே என் வாசம் சுவாசம் எல்லாம் நீங்கதான் என் வாழ்வில் மொத்தம் அர்த்தம் நீங்கதான்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm A# C F Dm C F Dm F Am F Dm F Am F G C A# G C F G C A# G C F C F F C F C F F F F Am F C F Am F C Am Dm G C Am Dm G C Dm Am Dm F C F C F C F C F F Am F C F Am F C Am Dm G C Am Dm G C Dm Am Dm F C F C F C F C F
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உம் தயவால் என்னை உயர்த்தினீர்um thayavaal ennai uyarthineerPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno