இராக்காலம் வெகு சமீபம்
iraakkaalam vegu sameebam
இராக்காலம் வெகு சமீபம் விழித்தெழும்பி வேகம் செல்லு நிலையானதொன்றும் இங்கில்லை இங்கில்லை நித்திய வாழ்வோ அங்குண்டு அங்குண்டு இராக்காலம் வெகு சமீபம் விழித்தெழும்பி வேகம் செல்லு வேகம் செல்லு
உன் பெலன் எல்லாம் போய்விடும் ஒருநாள் உன் வினை ஒன்று சேர்ந்து உருத்திடுமே உன் பாவமெல்லாம் திரும்பிடும் ஒருநாள் உலக பயம் உன்னை விரட்டிடுமே நம்பிட யாருமின்றி நின்றிட நிழலுமின்றி நிம்மதி தேடி நீயும் ஏங்குவாயே உன் குற்றம் உன்மேல் திரும்புமுன் சிந்தித்து நீயும் மனம் திரும்பாயோ
பாடுகள் பலப்பட்டு பேசிட யாருமின்றி படுக்கையை கண்ணீரினால் நினைக்கிறாயோ பாதைகள் கடந்தும் பாதங்கள் தளர்ந்தும் பயணத்தில் அர்த்தமில்லை என்கிறாயே பாறை போல் பாரமாய் இருக்கும் உன் சுமையை பனித்துளி போல மாற்றுவாரே நீ பதறாமல் கூப்பிடு உன் அருகினில் இயேசு நிற்கிறார்
அறுவடை மிகுதி ஆட்களோ குறைவு அழைப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்பாய் அழிந்திடும் உலகை ஆதாயம் செய்திட அன்பரின் அண்டையில் சேர்ந்திடுவாய் தேவனின் சேவையை செய்திட சீக்கிரமாய் உன்னை பலியாய் அர்பணிப்பாய் இனி வாழ்வது நீ அல்ல இயேசு உன்னை மீட்டுக்கொண்டாரே
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உம் தயவால் என்னை உயர்த்தினீர்um thayavaal ennai uyarthineerPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno