ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்
aazhgadal irulinil padagil thanimaiyil
1. ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில் அலைமேல் அலை வந்து மோதும் நேரத்தில் உதவிக்கு யாருமின்றி உடலினிள் பெலனுமின்றி உடைந்த உள்ளத்தால் உதிரமும் உறைந்ததே உயிரே போகும் நேரம் நீரே வந்தீரே வார்த்தையால் சொன்னீரே வாழ்ந்திட செய்தீரே
2. எத்தனை குழிகளில் என்னை தள்ள பார்த்தனர் எத்தனை குற்றங்கள் எந்தன் மீது சுமத்தினர் அத்தனை கரங்களுக்கும் விலக்கி மீட்டீரே ஆனந்த வாழ்வு மீண்டும் தழைக்க செய்தீரே கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் இல்லையே
3. நண்பனின் துரோகத்தால் நான் விழுந்து போவேனோ துஷ்டனின் சூழ்ச்சியால் நான் மாய்ந்து மறைவேனோ தொடங்கின ஓட்டத்தை முடிப்பவர் நீரன்றோ தொடரும் உம சமூகம் நான் முன் செல்லவே இறைவனே ஏசுவே என் இதயத்தின் இமயமே
4. தனிமையில் தவித்த போது தாங்கி அணைத்து கொண்டீரே தவித்த என் நாவிற்க்கு ஜீவத் தண்ணீர் தந்திரே வாடின வாழ்விலே வசந்தமாய் வந்தீரே அடைப்பட்ட வாசலில் வழியை திறந்தீரே தயக்கமே இல்லையே தெய்வமே நீர்தானே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D E A D E A
E G A A
D Bm G A
D Bm G A
D G A D
D
D
D D E A
E F# F# Bm
A E E G
D A Bm A D
D
D
D D E A
E F# F# Bm
A E E G
D A Bm A D
D
DMore from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உம் தயவால் என்னை உயர்த்தினீர்um thayavaal ennai uyarthineerPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno